உயிரிழந்த சிறுவனுக்கு இழப்பீடாக 20107500000 ரூபா!!

535

Boy

அமெரிக்காவில் சிறுவன் ஒருவன் உயிரிழந்தமைக்கு இழப்பீடாக 150 மில்லியன் டொலர் ( 2 ஆயிரத்து 10 கோடியே 75 இலட்சம் ரூபா ) வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

அமெரிக்காவின் ஜோர்ஜியா மாகாணத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் கிறிஸ்லெர் நிறுவனத்தின் தயாரிப்பான ஜீப் வண்டியொன்றை வாங்கியுள்ளனர். குறித்த ஜீப் வண்டி வீதியோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது வீதியில் வேகமாக வந்த வாகனமொன்று குறித்த ஜீப் வண்டி மீது மோதியுள்ளது.

இதனையடுத்து குறித்த ஜீப் வண்டியிலிருந்து டீசல் கசிந்து தடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதன்போது ஜீப் வண்டியினுள் இருந்த ஜீப் வண்டியின் உரிமையாளரின் 4 வயதுடைய மகனான ரெமிங்டன் வோல்டன் உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து சம்பவம் தொடர்பில் கிறிஸ்லர் நிறுவனம் மீது சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரால் முறைப்பாடு செய்யப்பட்டது.

குறித்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள், மனித உயிர்கள் மீது அலட்சியமாக இருந்ததாகவும், காரின் வடிவமைப்பில் குறைப்பாடுகள் இருந்ததாகவும் கூறி கிறிஸ்லர் நிறுவனத்தின் மீதான குற்றத்தை சுட்டிகாட்டினர்.

பின்னர் சிறுவன் ரெமிங்டன் வோல்டனின் இறப்புக்கு இழப்பீடாக 150 மில்லியன் டொலரை குடும்பத்துக்கு வழங்க வேண்டும் என கிறிஸ்லர் நிறுவனத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதேவேளை இந்த தீர்ப்பு குறித்து கிறிஸ்லர் நிறுவனம் கருத்து கூற மறுத்து விட்டது.

எனினும் இந்த தீர்ப்பு துரதிர்ஷ்டவசமானது என்று கூறிய அந் நிறுவன செய்தி தொடர்பாளர், வழக்கு தொடர்பாக தாங்கள் கொடுத்த தகவல்களை நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.