வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரியின் 125 ஆண்டு நிறைவை முன்னிட்டு விசேட இரத்தான நிகழ்வுக்கு பாடசாலை சமூகம் ஏற்பாடு செய்துள்ளது .பாடசாயின் அதிபர் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் பழையமாணவர்கள் பெற்றோர் நலன்விரும்பிகள் என பல்வேறு பட்ட தரப்பினரையும் உள்ளடக்கிய இந்த இரத்ததான நிகழ்வானது மூன்று கட்டங்களாக இடம்பெற நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு வருகின்றன.
மேற்படி இரத்ததான நிகழ்வு வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரியில்
முதலாவது கட்டம் 24.04.2015(வெள்ளிகிழமையும்)
இரண்டாவது கட்டம் 06.05.2015(புதன்கிழமையும் )
மூன்றாவது கட்டம் 13.05.2015(புதன்கிழமையும் )
காலை 9.30 மணிமுதல் இடம்பெற உள்ளது . மேற்படி இரத்ததான நிகழ்வில் பங்குகொள்ள விரும்பும் மாணவர்கள் ஆசிரியர்கள் பழையமாணவர்கள் பெற்றோர் மற்றும் நலன்விரும்பிகள் தங்களது பெயர்களை பாடசாலை அதிபர் அலுவலகத்தில் பதிவு செய்யும் வண்ணம் கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.
மேலதிக விபரங்களுக்கு: (www.rgmv.sch.lk)