வவுனியா சிதம்பரபுரம் மக்களை கொண்டு அரசியல் நடத்த முயற்சி : ஜி.ரி.லிங்கநாதன் குற்றச்சாட்டு!!

698

GT Linganaathan

வவுனியா – சிதம்பரபுரம் நலன்புரி நிலையத்தில் வசிக்கும் மக்களை வைத்து சிலர் அரசியல் நடத்த முயற்சிப்பதாக வட மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் தெரிவித்துள்ளார். குறித்த நலன்புரி நிலையத்தில் வசிக்கும் மக்களை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நலன்புரி நிலையத்தில் வசிக்கும் மக்களின் பிரச்சினைகளை தானும் வட மாகாண முதலமைச்சரும் நன்கறிவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாகாண சபையின் அடுத்த அமர்வில் மக்களின் காணிப் பிரச்சினை தொடர்பிலான பிரேரணையை நிறைவேற்றி, அதனை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கையளிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மாகாண அமைச்சர் ப.சத்தியலிங்கம் மற்றும் முதலமைச்சர் ஆகியோர், இது தொடர்பில் மீள்குடியேற்ற அமைச்சருடன் கந்துரையாடியுள்ளதாகவும் விரைவில் காணிகளை பெற்றுக்கொடுப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்படுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், நலன்புரி நிலைய மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண தாக் நடவடிக்கை எடுப்பதாகவும், எனினும் பலர் இந்த மக்களின் பிரச்சினைகளை வைத்து அரசியல் நடத்துவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.