ஆந்திரா வனப்பகுதியில் தமிழக உறவுகள் கொல்லப்பட்டமைக்கு நீதி தேவை : செல்வம் அடைக்கலநாதன்!!

1260

Selvam-adaikalanathan

இந்தியாவின் ஆந்திரா வனப்பகுதியில் தமிழக உறவுகள் கொல்லப்பட்டமைக்கு நீதி தேவையென வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

ஈழத்தமிழர்கள் தாக்குதலுக்கு உள்ளாகும்போதெல்லாம் அதற்கு எதிராக குரல் கொடுத்தவர்கள் தமிழக மக்களேயென, அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்ததுள்ளார்.

தமிழர்களுக்கு எங்கும் அநீதிகளே இடம்பெற்றுவருகின்றது என்பது இவ்வாறான செயற்பாடுகள் மூலம் வெளிக்காட்டப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆந்திராவுக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையிலான முரண்பாடுகள் இன்று அப்பாவித் தமிழர்களை கொலை செய்வதற்கு ஒரு காரணியாக மாறியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான காவற்துறையின் கண்மூடித்தனமாக செயற்பாடுகள் ஸ்ரீலங்காவில் மாத்திரமின்றி இந்தியாவிலும் அரங்கேறி வருகின்றமை கண்டனத்திற்கு உரியது எனவும் அவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் நீதியான விசாரணைகள் நடத்தப்பட்டு குற்றமிழைத்த காவற்துறை அதிகாரிகளுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.