யாழில் 590 ஏக்கர் காணிகள் விடுவிப்பு!!

721

Jaffna

யாழ் மாவட்டத்தில் உயர் பாதுகாப்பு வலயத்திற்குட்பட்ட 590 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. உயர் பாதுகாப்பு வலயத்திற்குட்பட்ட காணிகள் விடுவிப்பின் இரண்டாம் கட்டமாக குறித்த காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்படி தெல்லிப்பளை பிரதேச செயலகத்திற்குட்பட்ட J/235 காங்கேசன்துறை தெற்கு, J/236 பளை வீமன்காமம் வடக்கு, J/237 பளை வீமன்காமம் தெற்கு, J/238 கட்டுவன், J/240 தென்மயிலை, J/241 வறுத்தலைவிளான், J/250 தையிட்டி தெற்கு, J/252 பலாலி தெற்கு, மற்றும் கோப்பாய் பிரதேச செயலகத்திற்குட்பட்ட J/284 வளலாய் ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளில் இருந்த காணிகளே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய குறித்த காணி உரிமையாளர்கள் இன்று காலை 09.00 மணி முதல் இப் பகுதியிலுள்ள தங்களது காணிகளை பார்வையிடுவதுடன் தமது பதிவுகளையும் கிராம சேவையாளர்கள் மூலம் மேற்கொள்ளலாம், என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.