இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ளும் ஸ்ரீலங்காவை சேர்ந்தவர்கள் விமான நிலையங்களில் வைத்து இந்திய விசாவினைப் பெற்றுக்கொள்ளும் செயற்திட்ட நடைமுறை அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவின் புதுடில்லி, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூர், திருவனந்தபுரம், கொச்சின் மற்றும் கோவா ஆகிய விமான நிலையங்களில் வைத்து ஸ்ரீலங்காவை சேர்ந்தவர்கள் 30 நாட்களுக்குள் விசாவை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் ஸ்ரீலங்கா விஜயத்தின்போது விசா தொடர்பாக வழங்கிய உறுதி மொழிக்கு அமைவாக குறித்த செயற்திட்டம் நடைமுறைக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா 43 நாடுகளுக்கு விமான நிலையத்தில் வீசா பெற்றுக்கொள்வதற்கான அனுமதியை அண்மையில் வழங்கியிருந்தது.
இந்த நிலையில் ஸ்ரீலங்காவும் அந்தப் பட்டியலில் 44 ஆவது நாடாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது.