சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் சென்னைக்கான புதிய சேவையை ஆரம்பித்துள்ளது!!

597

Flight

சிறிலங்கன் விமான சேவை நிறுவனம் கொழும்பிலிருந்து சென்னைக்கான தனது விமான சேவையை நான்காக அதிகரித்துள்ளது.

இன்று முதல் சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை சென்னைக்கு தினமும் நான்கு சேவைகளை வழங்கவுள்ளது.

பயணிகளின் நலன் கருதி சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை இந்தியாவிற்கும் இலங்கைக்குமான சேவையை 86 ஆக அதிகரித்துள்ளது.

தென்னிந்தியாவின் முக்கிய நகரமான சென்னைக்கு சென்று வரும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதனால் அந் நகருக்கான விமான சேவையை அதிகரித்துள்ளதாக சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியா புதுவருடத்தன்று இலங்கையர்களுக்கான ஒன் அரைவல் விசா வசதியை சென்னை விமான நிலையத்தில் ஏற்படுத்திக் கொடுத்திருந்தது. இந் நிலையில் சிறிலங்கன் எயார்லைன்ஸ் தனது புதிய விமான சேவையை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.