மாங்குளத்தில் பஸ்- லொறி விபத்தில் இருவர் பலி!!

612

Maankulam

முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் பஸ் ஒன்றும் லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் பலியாகியுள்ளதாக மாங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸும் சிறிய லொறி ஒன்றும் மாங்குளம் தச்சடம்பன் பகுதியில் நேருக்கு நேர் மோதியதில் இவ் விபத்து ஏற்பட்டுள்ளது. நேற்றைய தினம் இரவு பத்துமணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இவ் விபத்தில் லொறியில் பயணித்த இருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ் விபத்து சம்பந்தமான மேலதிக விசாரணைகளை பொலிஸார் நடாத்தி வருகின்றனர்.