வீட்டில் தனியாக இருந்த 72 வயது மூதாட்டியை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் சந்தேகநபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பல்லம பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
சந்தேகநபர் சிலாபம் – வில்பத பகுதியைச் சேர்ந்த 60 வயதான ஒருவர் எனத் தெரியவந்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட மூதாட்டி சிலாபம் – வில்பத பகுதியைச் சேர்ந்தவராகும் எனவும், இவரின் ஒரே ஒரு பிள்ளையும் திருமணமாகி தனியாக உள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த 13ம் திகதி இரவு 09.00 மணியளவில் மூதாட்டியின் வீட்டுக்குச் சென்ற சந்தேகநபர் அவரை துஷ்பிரயோகம் செய்து விட்டு தப்பியோடியதாக பொலிஸார் மேலும் கூறியுள்ளனர்.
இதனையடுத்து 14ம் திகதி காலை அவர் சிகிச்சைகளுக்காக முந்தல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளை, வைத்தியப் பரிசோதனைகளுக்காக வைத்தியர்கள் அவரை சிலாபம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதன்போது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் அவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து சிலாபம் வைத்தியசாலையில் இருந்து பல்லம பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
பின் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் மூதாட்டியிடம் வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளனர். சந்தேகநபர் பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளார். சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.






