வவுனியாவில் கடை உடைக்கப்பட்டு திருட்டு!!

610

vavuniya

வவுனியா குழுமாட்டுச்சந்தியிலுள்ள பலசரக்குக் கடை ஒன்று நேற்று (17.04) இரவு உடைக்கப்பட்டு பொருட்கள் திருடப்பட்டுள்ளது. இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது..

வவுனியா குழுமாட்டுச்சந்தியிலுள்ள பலசரக்குக் கடை ஒன்றை உரிமையாளர் பூட்டிவிட்டுச் சென்றபின்னர் பின்னிரவில் கடையை உடைத்து உள்நுழைந்த திருடர்கள் அறுபதாயிரம் ரூபாவிற்கும் அதிகமான பொருட்களை திருடிச் சென்றுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வருகைதந்த வவுனியா பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டதோடு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்தமாதமும் இக் கடை உடைக்கப்பட்டு பொருட்கள் திருடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

-விஜி-