ஒருநாள் போட்டியில் 350 ஓட்டங்கள் பெற்று சாதனை படைத்த வீரர்!!

434

Liam-Livingstone

ஒருநாள் போட்டியில் இங்கிலாந்தின் நன்ட்விச் கழகத்திற்காக விளையாடிய லியாம் லிவிங்ஸ்டன் 350 ஓட்டங்களைப் பெற்று வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.

இங்கிலாந்து கழக மட்டப் போட்டிகளில் விளையாடிய 21 வயதான லியாம் லிவிங்ஸ்டன் 138 பந்துகளில் 350 ஓட்டங்களைப் பெற்று வரலாற்றில் இடம்பெற்றுள்ளார்.

நன்ட்விச் மற்றும் கல்டி கழக அணிகளுக்கு இடையில் நேற்று இடம்பெற்ற கழக மட்டத்திலான போட்டியின் போதே இச் சாதனை படைக்கப்பட்டுள்ளது.

லியாம் லிவிங்ஸ்டனால் பெறப்பட்ட 350 ஓட்டங்களில் 34 நான்கு ஓட்டங்களும் 27 ஆறு ஓட்டங்களும் உள்ளடங்கும்.

இப்போட்டியில் நன்ட்விச் கழக அணி 45 ஓவர்களில் 579 ஓட்டங்களைப் பெற்று தனது ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய கல்டி கழக அணி 79 ஓட்டங்களுக்குள் ஆட்டமிழந்து, 500 ஓட்டங்களால் படு தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது.