62 வயது காதலியை வலைவீசி தேடும் 29 வயது இளைஞன்!!

514

LOVE

சீனாவில் திடீரென காணமால் போன 62 வயது காதலியை இளைஞர் ஒருவர் மனம் தளராமல் தேடி வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவை சேர்ந்த சூ ஜிங்(29) என்ற நபர் டேட்டிங் தளத்தின் மூலம் கடந்த ஓராண்டிற்கு முன்பு தனது காதலியை(62) சந்தித்துள்ளார். இருவருக்குமிடையே அதிக வயது வித்தியாசம் இருந்தாலும், அதை பற்றி கவலைப்படாத சூ ஜிங், அவரது காதலியை தீவிரமாக காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில் திடீரென ஒரு நாள் தன் காதலி மாயமாகிவிடவே அவரை கண்டுபிடிக்க தன் வேலையை ராஜினாமா செய்துள்ளார். இதன்பின் அப்பெண்ணின் சொந்த ஊரான ஹுனான்(Hunan) மாகாணத்தில் உள்ள சியாங்டானுக்கு(Xiangtan) சென்று அவரது வீட்டையும் கண்டுபிடித்துள்ளார்.

அப்போது அங்கிருந்த அப்பெண்ணின் மருமகன் இவரை அவமதித்து அனுப்பியுள்ளார். மேலும் தனது காதலியின் முன்னாள் கணவரை சூ ஜிங் தொடர்பு கொண்டு, அவர் இருக்கும் இடம் பற்றி விசாரித்துள்ளார்.

ஆனால் இவரது காதலியின் கணவரோ அப்பெண்ணுடன் ஆன விவகாரத்து சான்றிதழை காண்பித்துவிட்டு தப்பிவிட்டார். எனினும் மனம்தளராத சூ ஜிங் பத்திரிகைகளில் தன் காதலி குறித்து விளம்பரம் செய்து தேடி வருகிறார்.

தனது காதலி குறித்து ஜிங் கூறுகையில், 62 வயதை எட்டியவளாக இருந்தாலும் எனது காதலி 40 வயதுடையவள் போல் இருப்பாள்.

அவள் தான் என் முதல் பெண் தோழி. என் முதல் காதலி. ஒவ்வொரு நாள் இரவும் பகலும் அவளை பற்றியே யோசிப்பேன் என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.