குழந்தையை பிரசவித்து வைத்தியசாலையிலேயே விட்டுச் சென்ற தாய் : மட்டக்களப்பில் சம்பவம்!!

651

Baby

பிரசவித்த சில மணி நேரத்திலேயே தாய் ஒருவர் குழந்தையை வைத்தியசலையில் விட்டுச் சென்ற சம்பவம் ஒன்று மட்டக்களப்பு வைத்தியசாலையில் நடந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று மாலை வைத்தியசாலையில் பிரசவத்திற்காய் அனுமதிக்கப்பட்ட தாய் ஒருவர் இன்று அதிகாலை குழந்தையை பிரசவித்து விட்டு அங்கேயே விட்டு சென்றுள்ளார்.

மட்டக்களப்பை சேர்ந்த 29 வயதுடைய சுதர்சினி என்ற தாயே இவ்வாறு தனது குழந்தையை வைத்தியசாலையில் விட்டுச்சென்றுள்ளார். இது தொடர்பாக மட்டக்களப்பு பொலிஸார் தாயாரை தேடி வருகின்றனர்.