மொபைல் நிறுவனம் மீது டோனி வழக்கு!!

439

Dhoni

இந்திய கிரிக்கெட் அணி தலைவர் டோனி தனியார் நிறுவனம் மீது ஏற்கனவே வழக்கு தொடர்ந்து இருந்தார். தனக்கு வழங்க வேண்டிய ரூ.10 கோடி பணத்தை செலுத்தாமல் வைத்திருப்பதாக மனுவில் தெரிவித்தார்.

இதை தொடர்ந்து டோனியின் பெயரை பயன்படுத்தக் கூடாது என்று அந்த மொபைல் நிறுனத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில் டோனி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்து உள்ளார். நீதிமன்ற உத்தரவையும் மீறி மொபைல் நிறுவனம் தனது பெயரை பயன்படுத்துவதாக மனுவில் தெரிவித்தார்.

இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு அந்த நிறுவனத் துக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.