19வது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளிக்காதிருக்க 3 த.தே.கூ. உறுப்பினர்கள் முடிவு!!

630

Sivasakthi

19வது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளிப்பது குறித்த தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சித் தலைமையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

19வது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளிக்காதிருக்க தான் உள்ளிட்ட மூவர் தீர்மானித்துள்ளதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குறிப்பிட்டுள்ளார்.

செல்வம் அடைக்கலநாதன், எஸ்.வினோ நோதரலிங்கம் மற்றும் சிவசக்தி ஆனந்தன் ஆகியோரே இவ்வாறு எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

தற்போதைய அரசாங்கம் தமிழ் மக்களின் கோரிக்கைகளுக்கு நியாயமான தீர்வை பெற்றுக் கொடுக்கவில்லை என சிவசக்தி ஆனந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் அரசாங்கம் கொண்டுவரும் திருத்தச் சட்டத்தை ஆதரிக்காது, அரசாங்கத்தின் நடவடிக்கைகள் தொடர்பில் கண்காணிக்க வேண்டும் என இவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர்களுக்கு சுட்டிக்காட்டியுள்ளனர்.