வெள்ளவத்தையில் விபச்சார விடுதி முற்றுகை: மூன்று பெண்கள் கைது!!

619

prostitute-center-Arrest1

கொழும்பு, வெள்ளவத்தை நகரில் மசாஜ் கிளப் என்ற பெயரில் இயங்கிய விபச்சார விடுதி ஒன்றை முற்றுகையிட்ட பொலிஸார் 4 பேரை கைது செய்துள்ளனர்.

வெள்ளவத்தை பொலிஸார் நேற்று முன்தினம் இரவு இந்த முற்றுகையை மேற்கொண்டதுடன், மூன்று பெண்கள் மற்றும் நிலையத்தின் முகாமையாளர் எனக் கூறப்படும் நபரையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண்கள் 21 மற்றும் 31 வயதுக்கு உட்பட்டவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். முகாமையாளர் உட்பட சந்தேக நபர்கள் நேற்று கல்கிஸ்சை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.