கிளிநொச்சி அறிவியல் நகா் பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை புகையிரதத்துடன் கார் மோதியதில் களுத்துறையைச் சோ்ந்த குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து இன்று மதியம் இடம்பெற்றுள்ளதாக மாங்குளம் பொலிசார் தெரிவித்தனர். அறிவியல் நகர், பல்கலைக்கழக வீதியிலுள்ள புகையிரதக் கடவையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கடவையைக் கடக்க முற்பட்ட கார் பரீட்சார்த்த புகையிரதத்துடன் மோதுண்டுள்ளது.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.






