கைவிரல் அடையாளம் உள்ளடக்கிய புதிய கடவுச்சீட்டை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக பொதுமக்கள் ஒழுங்கு அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
இத்திட்டத்தை செயற்படுத்த ஒன்றரை அல்லது இரண்டு வருடங்கள் செல்லும் எனவும் பழைய கடவுச்சீட்டு இரத்து செய்யப்பட மாட்டாதெனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கடந்த சில ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரட்டைக் குடியுரிமை வழங்கும் திட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்படுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
அத்துடன் வெவ்வேறு காரணங்களால் பிரஜாவுரிமை இழந்தவர்களுக்கு அதனை மீளப் பெற்றுக் கொடுக்கும் திட்டமும் இதில் அடங்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் குற்றம் இழைத்தவர்கள் இத்திட்டத்தின் மூலம் நன்மை பெற முடியாது என பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்தார்.






