தனியார் ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை 10,000 ரூபாவாக உயர்த்த தீர்மானம்!!

611

Salary

தனியார் துறை ஊழியர்களின் மாதாந்த சம்பளத்தை 10,000 ரூபாவாக உயர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதுவே தனியார் ஊழியர்களின் ஆகக்குறைந்த அடிப்படைச் சம்பளமாக இருக்கும்.

இது தொடர்பில் தொழில் துறை அமைச்சர் எஸ்.பி.நாவின்ன சமர்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி கிடைத்துள்ளது.

அதன்படி, தனியார் ஊழியர் ஒருவரின் ஆகக்குறைந்த நாளாந்த சம்பளம் 400 ரூபாவாக அமையும் இதன் ஒரு கட்டமாக மே மாதம் முதலாம் திகதி தொடக்கம் தனியார் ஊழியர்களுக்கு 1500 ரூபா சம்பள உயர்வை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.