மைதானத்தில் மயங்கி விழுந்த கால்பந்து வீரர் பரிதாபமாக மரணம்!!

459

football

கால்­பந்து போட்­டி­யின்­போது மார­டைப்பு ஏற்பட்டதால் மைதா­னத்தில் மயங்கி விழுந்த பெல்­ஜியம் நாட்டின் இளம் கால்­பந்து வீரர் கிரிகோரி மெர்டன்ஸ் சிகிச்சை பல­னின்றி உயிரிழந்தார்.

21 வய­துக்குட்பட்­டோ­ருக்­கான பெல்ஜியம் தேசிய அணியில் இடம்­பெற்­றி­ருந்த துடிப்­பான வீரர் கிரி­கோரி மெர்டன்ஸ். தேசிய அணியில் சில போட்­டி­க­ளிலே விளை­யாடியிருந்­தாலும், செர்கிள் புரூகஸ், லோகிரன் ஆகிய கழகங்களுக்காக சுமார் 100 போட்­டி­களில் விளை­யா­டிய அனு­பவம் பெற்­றவர்.

இவர் கடந்த திங்­கட்­கி­ழமை நடை­பெற்ற ரிசர்வ் அணி போட்­டியில் விளை­யாடிக் கொண்­டி­ருந்­த­போது திடீ­ரென மார­டைப்பு ஏற்­பட்­டது.

இதனால் நிலை­கு­லைந்த அவர் மைதா­னத்­தி­லேயே மயங்கி விழுந்தார். உடனே வைத்தியர்கள் விரைந்து சென்று அவ­ருக்கு முத­லு­தவி சிகிச்சை அளித்து. மருத்­து­வ­ம­னைக்கு கொண்டு சென்­றனர். கோமா நிலைக்கு சென்ற அவ­ருக்கு உயிர்­காக்கும் கருவி மூலம் செயற்கை சுவாசம் அளிக்­கப்­பட்டு வந்­தது.

எனினும் அவ­ரது உடல்­நிலை மோச­ம­டைந்­தது. உயிர்­பி­ழைக்க வாய்ப்­பில்லை என்று வைத்தியர் கள் கூறி­ய­தை­ய­டுத்து, செயற்கை சுவா­சத்தை நிறுத்த உற­வி­னர்கள் சம்­மதம் தெரி­வித்­தனர். இதனால்இ நேற்று மாலை அவர் உயிர் பிரிந்­தது.