வவுனியாவில் அரும்புகள் அமைப்பினரால் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல்!!(படங்கள்)

806

அன்பினால் அனைவரையும் அரவணைப்போம். ‘அரும்புகள்’ கல்வி வளர்ச்சித்திட்டம் அமைப்பினால் வவுனியா நெடுங்கேணி ஒலுமடு அ.த.க பாடசாலையின் 75 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும், இரு ஆசிரியர்களுக்கு மாதாந்த கொடுப்பணவும் வழங்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் திரு.விமலேந்திரன் தலைமையில் நேற்று (08.05) நடைபெற்றது.

வடமாகாணசபை உறுப்பினர் இ.இந்திரராசா ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன், மாறாஇலுப்பை அ.த.க.பாடசாலை அதிபர் திரு.இராஜரட்ணம், மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.

உதவி புரிந்த அரும்புகள் அமைப்பினருக்கு நிகழ்வில் கலந்துகொண்ட மக்கள் பிரதிநிதிகளும், கல்விச்சமுகத்தினரும் நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.

21 22 23 25 26 27 24