பாரிய எரி­பொருள் தட்­டுப்­பாடு ஏற்­படும் அபாயம்!!

740

Fuel

பெற்­றோ­லிய கூட்­டுத்­தா­ப­னத்தில் ஐந்து நாட்­க­ளுக்கு போது­மான 10 ஆயிரம் மெற்றிக் தொன் எரிபொ­ருட்­களே கையி­ருப்பில் உள்­ள­தா­கவும் ஐந்து நாட்­களின் பின்னர் பாரிய எரி­பொருள் தட்டுப்பா­டொன்று ஏற்­ப­டு­மெ­னவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

கடந்த ஜன­வரி 20ஆம் திகதி முதல் எரி­பொ­ருட்­களின் விலை­யினை குறைத்­த­த­னை­ய­டுத்து தொடர்ச்­சி­யாக நட்டம் ஏற்­பட்­ட­தா­கவும் அத­ன­டிப்­ப­டையில் ஜன­வரி மாதம் முதல் இது­வ­ரையில் 6 பில்­லியன் ரூபாய் நட்டம் ஏற்­பட்­டுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. இது தொடர்பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,

நாளொன்றுக்கு இரண்­டா­யிரம் மெற்­றிக்தொன் எரி­பொருள் விற்­பனை செய்­யப்­ப­டு­கிற அதேவேளை, தற்­போது 10ஆயிரம் மெற்­றிக்தொன் எரி­பொ­ருளே கையி­ருப்பில் உள்­ளது தற்­போது எரி­பொருள் கொள்­வ­ன­விற்கு போதிய அளவு நிதி வச­திகள் இல்­லை­யெ­னவும் கூறப்­ப­டு­கின்­றது.

இதே­வேளை நாட்டில் எரி­பொ­ரு­ளுக்கு தட்­டுப்­பாடு இல்லை எனவும் சிலர் எரி­பொ­ருளின் விலையினை உயர்த்துவதற்காக எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட போவதாக போலி பிரசாரம் செய்து வருவதாகவும் அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

-வீரகேசரி-