விமான விபத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய டெல்லி அணி வீரர்கள்!!

484

Delhi

ஐ.பி.எல் 8 கிரிக்கெட் போட்டி இந்தியா முழுவதும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் பங்குபெற டெல்லி வீரர்கள் ராய்ப்பூருக்கு பயணம் மேற்கொண்டனர்.

இதற்காக டெல்லி வீரர்கள் அனைவரும் நேற்று முன்தினம் ராய்ப்பூருக்கு இண்டிகோ விமானம் மூலம் பயணித்தனர். இந்நிலையில் சுவாமி விவேகானந்தா விமான நிலையத்தில் தரைஇறங்கிய போது, அதே ஓடுதளத்தில் மேலும் ஒரு விமானம் இருந்ததால் திடீரென பரப்பரப்பு ஏற்பட்டது.

எனினும் சாமார்த்தியமாக செயல்பட்ட விமானி, விமானத்தை பாதுகாப்பாக தரை இறக்கினார். இதனால் டெல்லி வீரர்கள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.