பொரளை மயானத்தில் இடப்பற்றாக்குறை : சடலங்­களை அடக்கம் செய்­வ­தற்கு சிரமம்!!

892

Borella

கொழும்பு பொரளை மயா­னத்தில் சடலங்களை அடக்கம் செய்­வ­தற்கு இடப்­பற்­றாக்­குறை ஏற்­படும் நிலை தோன்­றி­யுள்­ள­தாக கொழும்பு மாந­கர சபையின் பொது சுகா­தார திணைக்­களம் தெரிவித்துள்ளது.

இறந்­த­வர்­களின் சட­லங்கள் கன­மான பிளாஸ்­டிக்கை பயன்­ப­டுத்தி மலர்ச்­சா­லை­களில் பதப்படுத்தப்­ப­டு­வதால் சட­லங்கள் உக்­கு­வ­தற்கு 6 மாத காலம் எடுப்­ப­தா­லேயே இந் நிலை ஏற்படுவ­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

ஒரு மாதத்­திற்கு 1300க்கும் மேற்­பட்ட சட­லங்கள் இங்கு அடக்கம் செய்­யப்­ப­டு­வ­தா­கவும் தெரிவிக்கப்­ப­டு­கின்­றது. ஒரு நாளைக்கு இந்து பெளத்தம் கிறிஸ்­தவம் என மும்­ம­தங்­களைச் சேர்ந்த­வர்­களின் 30 சட­லங்கள் இங்கு அடக்கம் செய்­யப்­ப­டு­வ­தா­கவும் கொழும்பு மாந­கர சபையின் பிர­தம வைத்­திய அதி­காரி ருவன் விஜெ­முனி தெரி­வித்­துள்ளார்.

மலர்ச்­சா­லை­களில் பயன்­ப­டுத்­தப்­படும் பொலித்தீன் கார­ண­மாக சட­லங்கள் உக்கிப் போவ­தற்கு 6 மாதங்­க­ளுக்கு மேலா­கி­றது. எனவே தான் இந்த நிலைமை ஏற்­பட்­டுள்­ள­தென்றும் டாக்டர் விஜேமுனி தெரி­வித்­துள்ளார்.

இந் நிலை தொட­ரு­மானால் எதிர்­கா­லத்தில் சட­லங்­களை அடக்கம் செய்­வ­தற்கு இடப்­பற்­றாக்­குறை ஏற்­படும் என்றும் அவர் எச்­ச­ரிக்கை விடுத்­துள்ளார். எனவே தற்­போது பாவிக்கும் பொலித்­தீ­னுக்கு பதிலாக விரைவில் உக்கிப் போகும் பொலித்தீனை சடலங்களை பதப்படுத்த பாவிக்குமாறு மலர்ச்சாலைகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.