பிரதான ரயில் பாதையின் குணுபிடிய பகுதியில் இடம்பெற்ற விபத்து காரணமாக ரயில் எஞ்சினுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக, ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இன்று காலை யாழ்தேவி ரயில் கண்டெயினருடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
ரயில் கடவைகளை மூடும் வேளை கண்டெயினர் உட்பிரவேசித்தமையே சம்பவத்துக்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.
இதேவேளை விபத்து குறித்த முழுமையான சேத விபரங்கள் இதுவரை கணக்கிடப்படவில்லை என ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த விபத்து காரணமாக ரயில் போக்குவரத்துக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.






