வடக்கு ரயில் போக்குவரத்து வழமைக்கு திரும்பியது!!

290

Train

வடக்கு ரயில் பாதையின் போக்குவரத்து நடவடிக்கைகள் இன்று பிற்பகல் முதல் வழமைக்குத் திரும்பும் என, ரயில்வே கட்டுப்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மதவாச்சி – வவுனியா வரை இடம்பெற்ற அவசர திருத்தப் பணிகள் காரணமாக, ரயில் போக்குவரத்து அனுராதபுரம் வரை மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

இதன்படி இன்று பிற்பகல் 01.45 அளவில் கொழும்பில் இருந்து புறப்படும் ருஜிண ரயில் வவுனியா வரை பயணிக்கும் என ரயில்வே கட்டுப்பாட்டு மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை நேற்று கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த ரயிலொன்றில் மோதி பெண்ணொருவர் பலியாகியுள்ளார்.

நாவலபிட்டி – பெணிகுடுமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் உயிரிழந்த பெண் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. சடலம் தற்போது நாவலபிட்டி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.