சங்ககாரவிற்கு ஆதரவாக கொழும்பில் ஆர்ப்பாட்டம்!!

529

Sankakara

இலங்கையின் கிரிக்கெட் வீரர் குமார் சங்ககாரவிற்கு ஆதரவாக இன்று கொழும்பில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சரே விளையாட்டு கழகத்தில் விளையாடுவதற்காக லண்டன் சென்ற போது, லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் வைத்து குடிவரவுத்துறை அதிகாரி ஒருவரால் தான் கடுமையாக நடத்தப்பட்டதாக குமார் சங்கக்கார தெரிவித்திருந்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு குமார் சங்ககார தனது டுவிட்டர் பக்கத்தில் இதனை பதிவு செய்திருந்தார்.

இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கொழும்பில் அமைந்துள்ள பிரித்தானிய தூதரகத்தின் முன்பாக சங்ககாரவின் ஆதரவாளர்களினால் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த ஆர்ப்பாட்டத்தின் ஏற்பாட்டாளர், மக்களையும் தம்முடன் இணைந்து கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.