புங்குடுதீவு மாணவியின் கொலை தொடர்பில் நேற்று (17.05) கைது செய்யப்பட்டவர்களை மருத்துவ பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்ட போது அவர்கள் மீது மக்கள் தாக்குதல் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
கடும் பிரயத்தனத்தின் மத்தியில் மக்களிடம் இருந்து சந்தேக நபர்களை பொலிசார் காப்பாற்றி யாழ். பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
அதேவேளை சந்தேக நபர்களை 48 மணி நேரம் பொலிஸ் காவலில் வைத்து விசாரிப்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.












