முள்ளிவாய்க்கால் சோகமயமானது : கண்ணீருடன் உயிரிழந்த உறவுகளுக்கு நினைவேந்தல்!!

583

இலங்கையின் இறுதிக் கட்ட யுத்தத்தில் உயிரிழந்த மக்களை நினைவுகூறி இன்று முள்ளிவாய்க்காலில் பிரதான நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சிவில் அமைப்புக்கள் இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.

வடமாகாண முதலமைச்சர் சிவி.விக்னேஸ்வரன், ததேகூ வட மாகாண சபை உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், பொது மக்கள் என பலரும் இதில் கலந்து கொண்டனர்.

முதலமைச்சர் சிவி.விக்னேஸ்வரன் முற்பகல் 10.30 மணிக்கு சுடரை ஏற்றிவைத்தார். அதைத் தொடந்து வடமாகாண சபை உறுப்பினர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் சுடர் ஏற்றி வைத்தனர்.

தொடர்ந்து தமது உறவுகளை இழந்து தவிக்கும் உறவுகள் சுடங்களை கண்ணீர்மல்ல ஏற்றினர். கொடுந்துயரை அனுபதித்த உணர்வோடும், உறவுகளின் இழப்பினால் ஏற்பட்ட கனத்தோடும் கூடிய மக்களது கண்ணீர் வெள்ளத்தில் முள்ளிவாய்க்கால் இன்றும் சோகமயமாகியது.

21 22 23 24 25 26 27