வவுனியா இறம்பைக்குளம் மகளீர் வித்தியாலய மாணவிகள் வித்தியாவின் கொலைகெதிராக கவனயீர்ப்பு போராட்டம் !!( படங்கள், வீடியோ)

935

கடந்தவாரம்கூட்டு  பாலியல் வன்புனர்விற்கு உட்படுத்தப்பட்டு மிக கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு உயர்தர மாணவி வித்தியா சிவலோகநாதன்  படுகொலையைக் கண்டித்து வவுனியா இரம்பைக்குளம் மகளீர்  மகா வித்தியாலய மாணவிகள்  இன்று(19.05.2015) காலை 10.00 மணியளவில் பாடசாலைக்கு அருகில்அமைதியான முறையில்  கவனயீர்ப்பு போராட்டத்தில்  ஈடுபட்டனர்.

பாடசாலை ஆசிரியர்கள், மாணவிகள் என நூற்றுக்கணக்கானவர்கள் வவுனியா கோரவபோதான வீதியின் இருபுறமும்  ஒன்றுதிரண்டு மாணவி வித்தியாவின் படுகொலைக்கு நீதி வேண்டிய வாசகங்கள் அடங்கிய பதாகைகளைத் தாங்கிஅமைதியான முறையில்  கவனயீர்ப்பு போராட்டத்தில்  ஈடுபட்டனர்.கவனஈர்ப்பில்  ஈடுபட்ட மாணவிகள்,

“காவலென்று போலியாய் வேலிகள் எமக்கு வேண்டாம்,”

“போதைவஸ்துப் பிரயோகம் போக்குகிறதே எம் உயிரை உடனடியாக தடை செய்”,



“சட்டத்தரணிகளே மாணவர் கண்ணீரில் காசு உழைக்காதே,”

“எம் சமூகமே பார்த்திருந்தது போதும் பெண்ணினத்தை காப்பாற்ற எழுச்சி கொள்,”

“அரசே தவறுகள் செய்பவர்களுக்கு தண்டனை கொடு,”

“சட்டத் தரணிகளே மாணவரைக் காப்பாற்ற முன்வா,”

“நீதி தேவதையே மாணவிகளை திரும்பிப் பார்”

“RAISE THE VOICE AGAINST THE ABUSE “

“AUTHORITIES ACT OR QUIT”

” A STRONG PROTEST AGAINS  MONSTERS”

என எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தியிருந்தனர்

மாணவி வித்தியாவின் படுகொலையைக் கண்டித்து வடக்கிலும் கிழக்கிலும் பல்வேறு பாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா நகர செய்தியாளர் 

11312216_1012346572118629_1254637908_n 11291764_1012346625451957_480247847_n 11289772_1012346655451954_1324967057_n 11275509_1012346682118618_217121145_n 11267299_1012346608785292_739944601_n 11251607_1012346555451964_884145429_n

11245326_1012346612118625_751756343_n 11125610_1012346605451959_1463454845_n 11117386_1012346598785293_2102055872_n