வவுனியா தமிழ் மகாவித்தியாலய மாணவர்கள் புங்குடுதீவு மாணவியின் கொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்!!( படங்கள்,காணொளி)

902

கடந்தவாரம் பாலியல் வன்புனர்விற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு உயர்தர மாணவி வித்தியாவின் படுகொலையைக் கண்டித்து வவுனியா தமிழ் மகா வித்தியாலய மாணவர்கள் இன்று(20.05) காலை 11 மணியளவில் பாடசாலைக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் ஒன்றுதிரண்டு மாணவி வித்தியாவின் படுகொலைக்கு நீதி வேண்டி

“நீதி கிடைக்காவிடின் மாணவர் போராட்டம் தொடரும்”
“இன்னொரு சகோதரியை நாம் இழக்கத் தயாராக இல்லை”
“பாலியல் படுகொலை செய்த கயவர்களுக்கு சவுதியின் ஷரிஆ சட்டம் வேண்டும்”
“சட்டத்தரணிகளே குற்றவாளிகளை ஆதரிக்காதே”
“நேற்று கிருஷாந்தி இன்று வித்தியா நாளை யார்?
“இருப்பவர்கள் இல்லாததால் தான் இவ்வாறு நடக்கின்றதா?

போன்ற பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாதைகளைத்  தாங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

-பாஸ்கரன் கதீசன்-

11 1213 1415 16 17 18 1920