யாழில் பொலிசார் கண்ணீா்ப் புகைப் பிரயோகம் : தொடரும் பதற்றம்!!(படங்கள், காணொளி)

516

புங்குடுதீவு மாணவியின் கொலையில் சம்பந்தப்பட்ட கொலைக் குற்றவாளி மற்றும் சட்டத்தரணி ஆகியோரை இன்று யாழ் நீதிமன்றத்தில் முற்படுத்த முயன்ற சமயத்தில் அங்கு பெரும் களோபரம் ஏற்பட்டுள்ளது.

அவர்கள் இருவரையும் அடித்துக் கொல்ல வேண்டுமென்ற கோசத்துடன் மக்கள் திரண்டு தாக்குதல் நடத்தியதில், பொலிஸ் வாகனங்கள், நீதிமன்ற கட்டிட தொகுதி என்பன சேதமடைந்துள்ளன. அத்துடன் பொலிசார் இருவரும் காயமடைந்துள்ளனர்.

ஆர்ப்பாட்டக்காரர்களை விரட்டியடித்த பொலிசார் தடியடி நடத்தியபோதும், ஆர்ப்பாட்டக்காரர்கள் பதில் தாக்குதல் நடத்தியதால் நீதிமன்ற வளாகமே போர்க்களமாக காட்சியளிக்கின்றது.

 8 9 10 11