வேற்று கிரகவாசிகள் 300 கிலோ எடையுடன் கரடி தோற்றத்தில் இருப்பார்களாம்!!

612

Aliance

வேற்றுக் கிரகவாசிகள் இருக்கிறார்களா இல்லையா என்ற சர்ச்சை தொடர்ந்து இருந்து வருகிறது. பறக்கும் தட்டுகளில் அவர்கள் பூமிக்கு வந்து செல்வதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகிறது.

இந்த நிலையில் வேற்று கிரகவாசிகளின் உருவம் மற்றும் எடை அளவு குறித்து பார்சிலோனா பல்கலைக்கழகத்தின் பிரபஞ்ச தோற்றம் குறித்து ஆய்வு மேற்கொள்ளும் நிபுணர் பெர்கஸ் சிம்சன் கருத்து தெரிவித்துள்ளார்.

வேற்று கிரக வாசிகள் 5 கோடி பேர் வாழ்கின்றனர். அவர்கள் கரடி போன்ற தோற்றத்தில் இருக்கலாம். அதே நேரத்தில் அவர்கள் 300 கிலோ எடையுடன் இருப்பார்கள் என கூறியுள்ளார்.

‘பெயஸ்’ கோட்பாடு அடிப்படையில் இதை தாம் கணித்ததாக அவர் தெரிவித்துள்ளார். ‘பெயஸ்’ கோட்பாடு பெயசியன் புள்ளி விவர கணக்கியலின் பிரிவு ஆகும்.