யாழ். நீதிமன்ற தாக்குதல் சம்பவம் : கைதுசெய்யப்பட்ட 128 பேருக்கும் விளக்கமறியல்!!

496

Arrest

யாழ்ப்பாணம் நீதிமன்றம் மீதான தாக்குதல் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 128 பேரையும் இரண்டு வாரகாலம் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புங்குடுதீவு மாணவியின் கொலையுடன் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு தண்டனை வழங்குமாறு கோரி நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது நீதிமன்றம், பொலிஸ் நிலையம், பொலிஸார் மீது தாக்குதல் போன்ற சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 128 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட 128 பேரையும் இன்று யாழ் நீதிமன்றத்தில் பொலிஸார் ஆஜர்படுத்தியபோதே அவர்களை இரண்டு வாரகாலம் விளக்க மறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை, 128 பேரையும் யாழ் சிறைச்சாலையில் தடுத்து வைப்பதற்கு இடவசதியின்மையால் அனைவரும் நீதிமன்றத்தில் இருந்து உடனயடியாக அனுராதபுரம் சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.