20 வயது யுவதியை காணவில்லை என ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ். வேலணை 4 ஆம் வட்டாரம் பகுதியைச் சேர்ந்த யுவதி ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
குறித்த யுவதி யாழ். குருநகர் பகுதியிலுள்ள நிறுவனம் ஒன்றில் பணி புரிபவர் என்றும் நேற்று முன்தினம் வியாழக்கிழமை தொழிலுக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை என ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் பெற்றோர் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.
அந்த முறைப்பாட்டின் பிரகாரம் ஊர்காவற்துறை பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.