11 வயது சிறுவன் துஷ்பிரயோகம் செய்த இரு இளைஞர்கள் கைது!!

580

Abuse

11 வயது சிறுவன் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் இரண்டு இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சிறுவனின் பெற்றோர்களால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டினையடுத்து பொகவந்தலாவ பகுதியை சேர்ந்த 21 மற்றும் 24 வயது மதிக்கதக்க இருவரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் நேற்று முன்தினம் (22.05) மாலை இடம்பெற்றுள்ளது. குறித்த சிறுவன் பொகவந்தலாவ குயினா பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்களை ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகள் எடுத்திருப்பதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுவனை மேலதிக பரிசோதனைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார் இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.