
அயர்லாந்து நாட்டில் ஓரினச் சேர்க்கையாளர்களை அனுமதிக்கும் சட்டமூலத்தை அமுல்படுத்துவதற்கு பொதுவாக்களிப்பின் மூலம் மக்கள் தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.
ஓரினச் சேர்க்கையாளர்களை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை அந்நாட்டில் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் அந்நாட்டுப் பாராளுமன்றத்தில் அதனை சட்ட ரீதியாக அமுலாக்குவதற்கு பொதுவாக்கெடுப்புக்கு செல்லத் தீர்மானிக்கப்பட்டது.
இந்நிலையில் அந்நாட்டிலுள்ள 62 வீதமான மக்கள் ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனையடுத்து நாடெங்கிலுமுள்ள ஓரினச் சேர்க்கையாளர்கள் மகிழ்ச்சிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
பிரதான நகரங்களில் கூடி ஒருவருக்கொருவர் முத்தமிட்டு, ஆரத்தழுவி தமது சந்தோஷத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
மனித சமத்துவம் தொடர்பில் ஒரு சிறிய நாட்டிலிருந்து பெரிய செய்தி உலகுக்குச் சொல்லப்பட்டிருக்கிறது என அந்நாட்டின் பிரதமர் என்டா கென்னி தெரிவித்துள்ளார்.
ஓரினச் சேர்க்கையாளர்களை சட்டபூர்வமாக 20 நாடுகள் இதுவரை அனுமதி அளித்துள்ளன.




