பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்ற லட்சுமிமேனன்!!

423

Laxmi menon

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வலம் வருபவர் லட்சுமிமேனன். இவர் கைவசம் தற்போது பல படங்கள் உள்ளன. குறிப்பாக, அஜித் நடிக்கும் புதிய படத்தில் அவரது தங்கையாக நடித்து வருகிறார்.

முன்னணி நடிகையாக இருந்தாலும், இவர் பிளஸ் 2வில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை தேர்வு செய்து படித்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற தேர்வை எழுதி முடித்து, தேர்வு முடிவுக்காக காத்திருந்தார்.

இந்நிலையில், இன்று பிளஸ் 2 சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் லட்சுமிமேனன் வெற்றி பெற்றுள்ளார். இது அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

இதற்காக தனக்கு பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியர்களுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். மேலும், தான் இந்த தேர்வில் வெற்றிபெற வேண்டும் என்று வேண்டிக் கொண்ட அவருடைய குடும்பத்தாருக்கும், அவருடைய நலம் விரும்பிகள் பலருக்கும் இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அறிவித்துள்ளார்.