நைஜீரியாவில் கடத்தப்பட்ட இலங்கையர் விடுவிப்பு!!

496

ni

நைஜீரியாவில் அண்மையில் கடத்தப்பட்ட இலங்கையர் விடுவிக்கப்பட்டுள்ளார். நைஜீரியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயம் இது குறித்து அவரது உறவினர்களுக்கு அறிவித்துள்ளது.

இதேவேளை குறித்த இளைஞர் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது என, பிரதி வௌிவிவகார அமைச்சர் அஜித் ஜீ.பெரேரா தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த இளைஞரை விடுவிக்க கடத்தல்காரர்கள் பெருந் தொகை கப்பம் கோரியதாக வௌியான தகவல் குறித்து இதுவரை எதுவும் தெரியவரவில்லை என அவர் கூறியுள்ளார்.