வடக்கு கிழக்கு உட்பட நாட்டில் 14 நாட்களில் 10 மாணவிகள் துஸ்பிரயோகம் : அதிர்ச்சித் தகவல்!!

827

Radha

வடக்கு கிழக்கு உட்பட நாட்டில் கடந்த 14 நாட்களில் மாத்திரம் 10 பாடசாலை மாணவிகள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ள அதிர்ச்சித் தகவலை இராஜாங்க கல்வியமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ளார்.

பாடசாலைக்கு வெளியிலுள்ள சிலரால் இந்த பாலியல் துஷ்பிரயோகங்கள் நடத்தப்பட்டுள்ள போதிலும், இதில் பாடசாலைகளில் கற்பித்துக் கொடுக்கும் ஒருசில ஆசிரியர்களினாலும் மேற்கொள்ளப்பட்டுள்ளமை கவலையை அளிப்பதாக அமைச்சர் கூறினார்.

இதற்கமைய கடந்த இரண்டு வாரங்களில் இடம்பெற்றுள்ள இச்சம்பவங்களில் 10 மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்திருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்த சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.