இந்தியாவில் வாட்டி வதைக்கும் வெயில் 2000 பேர் பரிதாபமாக பலி!!

978

Ind

கோடை காலம் தொடங்கியதில் இருந்து, இந்தியா முழுவதும் கடும் வெயில் வாட்டி வதைக்கிறது. அதிலும் ஆந்திரா, தெலுங்கானாவிலும், வட மாநிலமான உ.பி., மற்றும் ஒடிசாவிலும், கருணையே காட்டாமல் சூரிய பகவான் சுட்டெரிக்கிறார்.

ஆந்திராவிலும், தெலுங்கானாவிலும், வெயிலுக்கு பலியானோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த இரு மாநிலங்களில் மட்டும், நேற்று வரை, 2,000 பேர் வெயிலால் இறந்து உள்ளனர்.

ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டத்தில், நேற்று முன்தினம், ஒரே நாளில், வெயிலுக்கு, ஓய்வு பெற்ற எஸ்.ஐ., உட்பட ஏழு பேர் மயங்கி விழுந்து இறந்தனர். இந்த இரு மாநிலங்களில், 46 டிகிரி செல்சியல் வெப்பம் பதிவாகி, மக்களை வாட்டி வதைக்கிறது.

ஒடிசாவில், 45.5 டிகிரி செல்சியல் வெப்பம் பதிவாகியுள்ளது. அங்கு, அனல் காற்று வீசுகிறது. ஒடிசாவில் மட்டும், 108 பேர், வெயிலை தாங்க முடியாமல் இறந்துள்ளனர்.

உ.பி., அரியானா, ராஜஸ்தான், தமிழகம், ஜார்க்கண்ட் மாநிலங்களிலும் கடும் வெயில் அடிக்கிறது. அதிலும், கடந்த வாரத்தில், கடுமையான வெயில் வாட்டி வதைத்தது. ´தென்மேற்கு பருவமழை தொடங்கவுள்ளதை அடுத்து, வெப்பத்தின் தாக்கம் படிப்படியாக குறையும்´ என அறிவித்து, வெயிலால் பொசுங்கி போயுள்ள மக்களின் வயிறுகளில் பால் வார்த்துள்ளது, வானிலை ஆராய்ச்சி மையம்.