இலட்சக்கணக்கான காதல் பூட்டுகளை அகற்ற பிரான்ஸ் முடிவு!!

339

Love

பிரான்ஸ் தலைநகரான பாரிஸில் உள்ள பாரிஸியன் ஆற்றுப் பாலத்தில் உள்ள இரும்பு கிரில்லிலான தடுப்பு சுவற்றில் கடந்த பல ஆண்டுகளாக காதல் ஜோடிகள் ´நேர்த்திக்கடன் பூட்டு´ மாட்டி காதல் யாகம் செய்து வருகின்றனர்.

உலக நாடுகளில் இருந்து சுற்றுலா வரும் காதலர்களும் தங்களது பங்குக்கு ஒரு நேர்த்திக்கடன் பூட்டை மாட்டிவிட்டுப் போவதால் இலட்சக்கணக்கான பூட்டுகள் இங்கு தொங்குகின்றன.

இந்த பூட்டுகளின் பாரம் தாங்காமல் சமீபத்தில் பாரிஸியன் பாலத்தின் ஒருபகுதி இடிந்து விழுந்ததாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில், பாரிஸ் நகரின் பாரம்பரிய எழிலை சீர்குலைத்து, மூடநம்பிக்கையை வளர்க்கும் நேர்த்திக்கடன் பூட்டுகளை இனி யாரும் மாட்டக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், ஏற்கனவே மாட்டப்பட்டுள்ள பூட்டுகள் அனைத்தையும் அகற்றவும் அரசு நிர்வாகம் முடிவு செய்துள்ளது. தடுப்பு சுவற்றில் இரும்பு கிரில்லுக்கு பதிலாக கண்ணாடிகளால் ஆன பேனல்களை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.