யாழ். நீதி­மன்ற தாக்­குதல் சம்­பவம் : 44 பேர் இன்று நீதி­மன்றில் ஆஜர்!!

652

Jaffna

யாழ்ப்­பாணம் புங்­கு­டு­தீவு மாணவி வித்­தி­யாவின் படு­கொ­லையைக் கண்­டித்து இடம் பெற்ற ஆர்ப்­பாட்­டத்தின் போது நீதி­மன்ற கட்­டடம் மீது தாக்­குதல் நடத்­தி­னார்கள் என்ற குற்­றச்­சாட்­டின்­பேரில் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள 44 பேர் இன்று யாழ். நீதி­மன்­றத்தில் ஆஜர்­செய்­யப்­ப­ட­வுள்­ளனர்.

இதே­வேளை பொலிஸ் காவ­லரண் மீதான தாக்­குதல், யாழ். சிறைச்­சாலை வாகனம் மீதான தாக்­குதல், மற்றும் பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் மீதான தாக்­குதல் குற்­றச்­சாட்டின் பேரில் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள 47 பேர் நேற்று முன்­தினம் நீதி­மன்­றத்தில் ஆஜர் செய்­யப்­பட்­டனர்.

இவர்­களில் முத­லா­வது சந்­தே­க­ந­ப­ரான யாழ். பல்­க­லைக்­க­ழக கல்­லூரி மாணவன் உட்­பட 9 பேரின் சார்பில் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி என்.ஸ்ரீகாந்தா சட்­டத்­த­ரணி எஸ்.தேவ­ரா­ஜாவின் அனு­ச­ரணை­யுடன் ஆஜ­ரானார். இத­னை­விட ஏனைய சந்­தேக நபர்­களின் சார்பில் சட்­டத்­த­ர­ணி­க­ளான எம்.ஏ. சுமந்­திரன், திரு­மதி ஜோய் மகா­தேவன், வி.ரி.சிவ­லிங்கம், வி.விஜ­ய­ரட்ணம், எம்.பி. எம்.மாஹீர், ஆகி­யோரும் ஆஜ­ரா­கி­யி­ருந்­தனர்.

இதே­வேளை நாளை வியா­ழக்­கி­ழ­மையும் நீதி­மன்றத் தாக்­குதல் குற்றச் சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டு ள்ள 33 பேர் நீதிமன்றில் ஆஜர்செய்யப் படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.