கொச்சிக்கடை அந்­தோ­னியார் ஆலய கொடி­யேற்றம் இன்று : 13ஆம் திகதி திரு­விழா!!

759

Church

கொச்­சிக்­கடை புனி­த ­அத்­தோ­னியார் ஆல­யத்தின் வரு­டாந்த திரு­விழா இன்று புதன்­கி­ழமை 3ஆம் திகதி கொடி­யேற்­றத்­துடன் ஆரம்­ப­மா­கின்­றது.

இன்று காலை 6.00 மணிக்கு தமிழ், சிங்­களம், ஆங்­கிலம் ஆகிய மூன்று மொழி­க­ளிலும் திருப்­பலி ஆரா­த­னைகள் நடத்­தப்­பட்டு பின்னர் கொடி­யேற்ற நிகழ்வு இடம்பெற்றது.

அந்த வகையில் எதிர்­வரும் 11 ஆம் திகதி வியா­ழக்­கி­ழமை வரை தினமும் மாலை 6.00 மணிக்கு ஆரா­த­னைகள் நடை­பெ­ற­வுள்­ளன.

எதிர்­வரும் 12ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை பேராயர் கர்­தினால் மல்கம் ரஞ்சித் ஆண்­டகை தலைமையில் மும்­மொ­ழி­க­ளிலும் வெஸ்பர் ஆரா­தனை நடை­பெறும். 13ஆம் திகதி சனிக்­கி­ழமை அதி­காலை 4.00, 5.00 மற்றும் 6.00 மணிக்கு திருப்­ப­லிகள் இடம்­பெ­ற­வுள்­ளன.

காலை 8.00 மற்றும் 10.00 மணிக்கும் நண்­பகல் 12.00 மணிக்கும் தமிழ், சிங்­களம், ஆங்­கில மொழிகளில் விசேட திரு­விழா திருப்­ப­லிகள் நடை­பெறும். மாலை 5.30 மணிக்கு புனித அந்தோனியார் திருச்சொரூப பவனி ஆலய முன்­ற­லி­லிருந்து ஆரம்­ப­மாகும். திருச்சொரூப பவனி முடிவில் விசேட ஆசீர்­வாதம் இடம்­பெ­ற­வுள்­ளது.