வவுனியா அஞ்சல் அலுவலக ஊழியர்கள் ஒருமணி நேர வேலை நிறுத்தம்!!(படங்கள்,(காணொளி))

592

வவுனியா அஞ்சல் அலுவலக ஊழியர்கள் இன்று(03.06.2015) ஒருமணி நேர அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். ஆளணிப் பற்றாக்குறை நிலவுவதாகவும் அதனை நிவர்த்தி செய்யுமாறும் கோரி இன்று காலை ஒரு மணி நேரம் தமது பணிகளைப் புறக்கணித்து தமது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

இப் பணிப்பகிஸ்கரிப்பால் தண்டப்பணம் செலுத்தும் மக்கள் உள்ளிட்டோர் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகினர்.

ஒரு அரச ஊழியரின் வேலை எட்டு மணிநேரமாக காணப்பட்ட போதிலும், தாங்கள் காலை ஐந்து மணிமுதல் மாலை எட்டு மணி வரை வேலை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் தொடர்ச்சியாக நீண்ட நேரம் கடமையாற்றவேண்டிய நிலை ஏற்பட்டு மன உளைச்சலுக்குள்ளாவதாக உத்தியோகத்தர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

மேலும் ஆளணிப் பற்றாக்குறை காரணமாக தம்மால் விடுமுறை கூட எடுக்க முடியவில்லை எனவும் தபால் நிலைய உத்தியோகத்தர்கள் தெரிவிக்கின்றனர்.

வவுனியா அஞ்சல் அலுவலகத்தில் பல வெற்றிடங்கள் காணப்படுகின்றதாகவும், இப்பிரச்சினை தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பல தடவைகள் எடுத்துக்கூறியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையென தெரிவிக்கும் அஞ்சல் அலுவலக உத்தியோகத்தர்கள், மக்களுக்கு சிறந்த சேவையை வழங்கவேண்டுமென்றால் இப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வைப் பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

-வவுனியா நெற் செய்திகளுக்காக பாஸ்கரன் கதீசன்-

1 2 3 4 5 7 8 9

WebADD