தேனிலவில் காணாமல் போன மணமகன் கண்டு பிடிப்பு : கூறிய காரணத்தால் பொலிஸார் அதிர்ச்சி!!

563

Missing

தேனிலவிற்காக ஹோட்டல் அறையில் தங்கி இருந்து மாயமான முறையில் தலைமறைவான இராணுவ வீரர் நான்கு தினங்களின் பின் கண்டு பிடிக்கப்பட்ட போதும் கையில் பணமில்லாத காரணத்தால் கற்குகை ஒன்றில் அஞ்சாவாசம் புரிந்ததாக பொலிஸாருக்குத் அதிர்சித் தகவலை தெரிவித்துள்ளார். இது பற்றி மேலும் தெரிய வருவதாவது-

கண்டி- தெல்தோட்டைப் பிரதேசத்தைச் சேர்ந்த ரலிமங்கொடை என்ற இடத்தைச் சேர்ந்த 33 வயதுடைய இராணுவ வீரர் ஒருவர் 23 வயதுள்ள பெண் ஒருவரைத் திருமணம் செய்வதற்காக பெற்றோர் விருப்பத்துடன் நான்கு மாதங்களுக்கு முன்பே நிச்சியம் செய்துள்ளனர்.

திருமணம் முடிந்த பின்னர் இருவரும் தங்குவதற்கு வீடொன்றையும் உறவினர் அமைத்து கொடுத்துள்ளனர். இந்நிலையில் கடந்த 29ஆம் திகதி திருமணம் நடைபெற்று தேன் நிலவிற்காக ஹோட்டல் ஒன்றிற்கு இருவரும் சென்றுள்ளனர்.

இரவு 12 மணியளவில் மணமகன் திடீர் என காணாமல் போயுள்ளார். இதனையடுத்து சம்பவம் தொடர்பில் மணமகள் கலஹா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து மோப்பநாய் சகிதம் பொலீசார் மணமகனைத் தேடியும் கண்டு பிடிக்க முடியாத நிலையில் நேற்று முன்தினம் தராஓயா என்ற இடத்தில் குறித்த மணமகன் அலைந்து திரிவதைக் கண்ட சிலர் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

கலஹா பொலிஸார் மேற்படி நபரைக் கண்டு பிடிக்கும் போது மயக்க மடைந்த நிலையில் காணப்பட்டுள்ளார். உடனே பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டதன் பின் தெளிவடைந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதன்பின் பொலிஸாருக்கு வழங்கிய தகவல் அதிர்ச்சி அளிப்பதாக இருந்துள்ளது. தனக்கு பணக் கஷ்டம் காரணமாக மனம் நொந்த நிலையில் இருந்ததாகவும் செய்வதறியாது லூல்கோந்துறை என்ற பெருந்தோட்டத்தில் உள்ள ஒரு கற்குகையில் ஓய்வெடுத்ததாகவும் கடந்த நான்கு தினங்களாக உணவு எதுவும் உற்கொள்ள வில்லை எனத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாகப் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் வைத்திய பரிசோதனைக்கும் உட்படுத்தப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இது ஒரு மனநோய் பாதிப்பா அல்லது வேறு காரங்களாக என்பது தெரியவில்லை என தெரிவிக்கும் பொலிஸார், சம்பவத்துடன் தொடர்புடைய நபர் கடந்த 10 வருடங்களாக வடக்கில் இராணுவ முகாம்களில் கடமையாற்றி வருபவர் எனவும் தெரிவித்தனர்.