வவுனியாவில் விபத்து : மூவர் படுகாயம்!!(படங்கள், காணொளி)

840

வவுனியா கண்டி வீதியில் இன்று(05.06.2015) மாலை 5 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது..

வவுனியாவில் இருந்து கண்டி வீதியின் ஊடாகச் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் முச்சக்கர வண்டியும் தேக்கவத்தையில் விபத்துக்குள்ளாகின. இவ் விபத்தில் முச்சக்கரவண்டி சாரதியான சூரியகுமார் (53 வயது), மோட்டார் சைக்கிளை செலுத்திய டிலிட்டன்(18 வயது) ஆகிய இருவரும் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் வீதியில் நின்ற சூரிய பண்டார என்ற 51 வயது பொலிசாரும் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு வருகைதந்த வவுனியா போக்குவரத்துப் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

– வவுனியா நெற் செய்திகளுக்காக பாஸ்கரன் கதீசன்-

02 2 03 3 04 4 5 6