களுத்துறை – மீகஹதென்ன பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் 14 வயதான தனது புதல்வியை பணத்திற்கான விற்ற சம்பவம் தொடர்பில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் கடந்த ஒரு வருட காலப்பகுதியில் தனது புதல்வியை பல்வேறு நபர்களுக்கு விற்பனைசெய்துள்ளமை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
கடந்த காலங்களில் களுத்துறை பிரதேசத்தில் பாடசாலை மட்டத்தில் இடம்பெறும் சிறுவர் துஸ்பிரயோகங்கள் தொடர்பில் மாணவர்களை தெளிவுபடுத்தும் நடவடிக்கைககளை காவல்துறை சிறுவர் மற்றும் மகளீர் பாதுகாப்பு பிரிவு நடவடிக்கை எடுத்திருந்தது.
இந்த தருணத்திலேயே குறித்த சிறுமியினால் தனது தாயார் தொடர்பில் முறைப்பாடு தெரிவிக்கப்பட்ட நிலையில், அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.