இனி தரம் ஒன்றிற்கு இனி 35 மாணவர்கள் மாத்திரமே!!

559

Grade 1

பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைக்கும் போது எண்ணிக்கையில் மட்டுப்பாடு இருக்க வேண்டும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, அடுத்த வருடம் தொடக்கம் முதலாம் தரத்திற்கு ஆகக்கூடியது 35 மாணவர்களே இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் 2007ம் ஆண்டு உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் பிரகாரம் மாணவர்கள் தொகை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இடையிலான தொடர்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.