தலைமன்னார் கடற்கரையில் கரையொதுங்கிய மனித உருவம் கொண்ட சிலை!!(படங்கள்)

574

தலைமன்னார் ஸ்ரேசன் பழைய பாலத்தடி கடற்கரையில் கரையொதுங்கிய நிலையில் இன்று வியாழக்கிழமை காலை மரத்தில் செதுக்கப்பட்ட பழைமை வாய்ந்த மனித உருவம் கொண்ட சிலை ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

நேற்று புதன்கிழமை மாலை இந்த சிலை கரையொதுங்கியதைக் கண்ட மீனவர்கள் தலைமன்னார் கிராம சேவை அலுவலகருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

மீனவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் இன்று காலை கிராம அலுவலகர் குறித்த பகுதிக்குச் சென்று சிலையை மக்களின் ஒத்துழைப்புடன் மீட்டு தனது அலுவலகத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் கிராம அலுவலகர் மன்னார் பிரதேச செயலாளரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.

மீட்கப்பட்ட மரத்தினால் செதுக்கப்பட்ட மனித உருவம் கொண்ட சிலை சுமார் 5 ½ அடி உயரம் கொண்டதாகவும், மிகவும் பழைமை வாய்ந்ததாகவும் காணப்பட்டுள்ளது.

அண்மையில் நேபாளத்தில் ஏற்பட்ட பூகம்பத்தினையடுத்து குறித்த சிலை கடலில் கலக்கப்பட்ட நிலையில் தலைமன்னார் ஸ்ரேசன் கடற்கரையில் கரையொதுங்கியிருக்க முடியும் என அப்பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

1 2 3